
அமாவாசை என்றாலே தமிழகத்தில் நல்ல தினமாக பார்ப்பார்கள். அதிலும் ஆடி அமாவாசை என்றால் அதற்கு கூடுதல் சிறப்பு தான். நல்ல காரியம் எதுவும் தொடங்க வேண்டுமானால் இந்த நாளை தவறாமல் பய்ன்படுத்தி கொள்வார்கள். அது மட்டுமில்லாமல் தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக இந்த நாளை பயன்படுத்தி கொள்வார்கள். இந்த நாளில் திதி கொடுத்தால் அந்த முன்னோர்கள் என்றும் நம்முடன் இருந்து நமக்கு நன்மைகளை தருவார்கள் என்பது ஒரு நம்பிக்கை. நேற்று தான் ஆடி அமாவாசை, இதனால் தமிழகத்தில் உள்ள கோவில்கள் நீர்நிலைகள் என எங்கும் கூட்டமாக இருந்தது. அதிலும் குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் காலை முதலே கூட்டம் இருந்தது. பயணம் செய்ய இயலாதவர்கள் வீட்டில் இருந்தே திதி கொடுத்தார்கள்.
இந்த திதி என்பது நம் முன்னோருக்கு செய்யும் மரியாதை ஆகும். ஆனால் இதனை செய்யும் பலர் தங்கள் வயதான பெற்றோர்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பியவர்கள். வீட்டில் நம்மை ஆளாக்கி வளர்த்த பெற்றோர்களை கடைசி வரை நம்முடன் வைத்து அவர்களுக்கு தொண்டும் செய்தாலே ஏழு தலைமுறைக்கு அந்த பலன் வந்து சேரும் என்பார்கள். அதை விட்டு விட்டு ஆடி அமாவாசை அன்று பெற்றோர்களை நினைப்பது என்பது வெறும் மூட நம்பிக்கை தான்.
வீட்டில் உள்ள முதியோர்கள் எல்லாம் ஆடி அமாவாசை அன்று காக்கையாக சாப்பிட வருவார்கள் என்றூ காத்து இருந்தார்கள் , தங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பியவர்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.