ஒரு சாதாரண நடிகனாக சினிமாவில் நுழைந்து இளைய தளபதியாக வளர்ந்து தன்னை இன்று நாளைய சூப்பர் ஸ்டார் என்னும் தரத்திற்கு உயர்த்தி கொண்டவர் நடிகர் விஜய். விஜய் சினிமாவில் அதிரடியாகவும் மாஸாகவும் தெரிந்தாலும், நேரில் பார்க்கும் போது மிகவும் இயல்பாக இருப்பார். அவர் கடந்த ஆண்டு நடித்து வெளிவந்த படம் "தலைவா". அதில் விஜய் ஒரு வசனம் பேசுவார். நீ வேர ஜாதி நா வேர ஜாதி இல்ல, ஒரே ஜாதி இந்தியா என்று. இந்த வசனத்திற்கு திரையரங்குகளில் கைதட்டல்கள் குமியும்.
சினிமாவில் மட்டும் அல்ல நிஜ வாழ்க்கையிலும் விஜய் அப்படி தான் போல. விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் பேசிய அவர் , விஜய்யை எல்.கே.ஜி.யில் சேர்க்கும் போது அவரது பள்ளி சான்றிதழ் மதம் என்னும் இடத்தில் இந்தியன் என்று கொடுத்ததாக கூறினார். இன்றளவும் விஜய்யின் பள்ளி சான்றிதழில் இந்தியன் என்றே இருப்பதாக கூறினார்.
உன்னை யாரோ பெத்து இருப்பா என்னை யாரோ பெத்து இருப்பா ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பி டா !!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.