அஜீத் விஜய் போட்டி என்பது நீண்ட ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருந்து வருகின்றது, அஜீத்தும் விஜய்யும் தாங்கள் நடிக்கும் திரைப்படங்களில் மாறி மாறி சவால் விட்டுக்கொள்வதும் அவர்களின் ரசிகர்கள் மோதிக்கொள்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ரசிகர்களிடையேயான மோதல் போக்கை தடுக்க அஜீத்தும் விஜய்யும் நல்ல நண்பர்களாக இருப்பதாக செய்திகள் வெளிவந்தன, இருவரின் குடும்பங்களும் பழகும் போட்டோக்கள் வெளியாகின. ஆனாலும் இருவரின் ரசிகர்களும் தொடர்ந்து ஃபேஸ்புக் டிவிட்டர்களில் அடித்துக்கொள்கின்றனர், சமீப காலமாக விஜய்யும் அஜீத்தும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் வசனங்களை தங்கள் படங்களில் வைப்பதில்லை.
விஜய் டிவி விருது வழங்கும் நிகழ்ச்சியில் அஜீத் கலந்து கொள்ளவில்லை, ஆனாலும் பலர் பல முறை அஜீத் பெயரை சொல்லி கரகோஷம் எழுப்பினார்கள், விஜய் டிவியும் அஜீத்தை புகழ்ந்து தலையில் வைத்து கொண்டாடினார்கள்.
ஃபேவரிட் ஹீரோ அவார்டை நடிகட் விஜய்க்கு வழங்கினார்கள், அந்த விருதை வாங்கிக்கொண்டு பேசும் போது தலையில் எவ்வளவு கனமான கிரீடம் இருந்தாலும் அந்த கிரீடத்தை தாங்கும் தலைக்கு கனம் இருக்க கூடாது என்றார். இது அஜீத்தை விமர்சிப்பது போல் உள்ளது என்றும் மீண்டும் விஜய் அஜீத் மோதல் வசனங்களுக்கு இது ஆரம்பமாக இருக்குமோ என்றும் பலர் கருதுகின்றனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.