இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்னுடன் சண்டையில் ஈடுபட்டதால் இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஆட்டத்தொகையில் பாதியை அபராதமாக செலுத்த உத்தரவிட்டு உள்ளது. முதல் டெஸ்டின் 2 ஆம் நாள் ஆட்ட இடைவேளியின் போது இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆண்டர்சன் கோபமாகி ஜடேஜாவை தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து இந்திய அணி ஆண்டர்சன் மீது புகார் அளித்து இருந்தது. பதிலுக்கு இங்கிலாந்து அணி ஜடேஜா மீது புகார் அளித்தது. இது விசாரணையில் இருந்தது . இதில் ஜடேஜாவுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆன்டர்சன் மீதான விசாரணை ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இந்த விவகாரத்தில் இந்திய கேப்டன் தோனி தனது மனம் திறந்த பேட்டியை அளித்து உள்ளார். இந்த தீர்ப்பு எங்களை மிகவும் புண்படுத்தி உள்ளது என்றார். இதில் பல உண்மைகள் மறைக்கப்பட்டு உள்ளன. ஜடேஜா எல்லைக்கோட்டு அருகே சென்று கொண்டு இருக்கும் போது ஆண்டர்சன் ஜடேஜாவை நோக்கி கெட்ட வார்த்தையில் திட்டி உள்ளார். தோனி அவரை சமாதனம் செய்து உள்ளார். எல்லாம் முடிந்து விட்டது என தோனி நினைத்த வேளையில் ஆண்டர்சன் மீண்டும் திட்டி உள்ளார். அது மட்டுமில்லாமல் ஜடேஜாவை தள்ளி விட்டு உள்ளார். இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழும் நிலைக்கு சென்று உள்ளார். இருந்தும் அவர் எதுவும் பேசவில்லை. இது எப்படி ஆக்ரோஷமான நடத்தையாகும். ஜடேஜாவின் மீது எந்த தவறும் இல்லை.
ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டு உள்ள தண்டனை தோனியை மிகவும் காயப்படுத்தி உள்ளதாக கூறி உள்ளார். ஜடேஜா மீது லெவல் 1 தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது என்பது குறிபிடத்தக்கது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.