நாம் குடிக்கும் காபியை பற்றி நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். காபியினால் நன்மைகளும் உள்ளது , தீமைகளும் உள்ளது.
* காபி குடித்தால் நம்மால் சுறுசுறுப்பாகசெயல்பட முடியும். ஏதாவது டென்ஷனாக இருந்தால் அந்த டென்ஷனை அது போக்கும்.
* எந்த கல்லீரல் பிரச்சனையும் வராமல் செய்யும்.
* நாம் தினமும் காபி அருந்துவதால் டைப் 2 சக்கரை நோய் வராமல் தடுக்கலாம். இதன் மூலம் சில கேன்சர்களையும் தடுக்க முடியும்.
* நமது மூளையை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும். அதனால் படிக்கும் போது, மூளைக்கு வேலை தரும் செயல்களை செய்யும் போது சோர்வுற்றால் காபி தருகிறார்கள்.
* ஒரு விளையாட்டுக்கு முன் காபி அருந்துவது நம்மை சிறப்பாக செயல்பட வைக்கும். இது நமது இதயம் துடிக்கும் வேகத்தை அதன் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும்.
இது போல சில நல்ல விஷயங்கள் இருந்தாலும் காபியில் பல விளைவுகளும் உள்ளன.
* ஒரு நாளைக்கு 5 காபிக்கு மேல் குடித்தால் அது நமக்கு வாரிசு இல்லாமல் செய்து விடும். பிரசவமாக இருக்கும் பெண்கள் கட்டாயம் காபியை தவிர்க்க வேண்டும்.
* காபி குடித்தவுடன் நமது மூளை சிறப்பாக செயல்பட்டாலும் அதன் பிறகு நமது மூளையின் செயல்பாடு குறைந்து விடும்.
* காபி குடிப்பதனால் நமது உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
* ஒரு நாளைக்கு 3 காபிக்கு மேல் குடிப்பவர்களால் சரியாக தூக்கம் வராது. அவர்களது தூக்கத்தை கெடுப்பது கட்டாயம் காபியாக தான் இருக்கும்.
* காபி குடிப்பதனால் நமது இதயத்தின் செயல்பாடு குறையும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.