எப்போதும் காதலை முதலில் ஆண்கள் தான் வெளிப்படுத்துவர் . ஆனால் இப்போது நடந்துள்ள ஆய்வின் படி , ஆண்கள் தான் விரும்பும் பெண் முதலில் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றனர் .
ஷாதி.காம் நடத்திய இந்த ஆய்வில் 6,500 கல்யாணம் ஆகாத இந்திய ஆண்கள் கலந்து கொண்டனர் . அந்த ஆய்வு முடிவின் படி 63.8% ஆண்கள் காதலை பெண்கள் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றனர் . அதற்கான நம்பிக்கை பெண்களிடம் இருக்கும் என்றும் நம்புகின்றனர் . மற்ற 36.2% ஆண்கள் பெண்களிடம் அந்த நம்பிக்கை இல்லை என்றும் , ஆண்கள் சொல்லுவது தான் வழக்கம் என்றும் கூறியுள்ளனர் .
மேலும் 61.2% ஆண்கள் நேராக வந்து பெண்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றனர் . 21.4% ஆண்கள் போனில் காதலை சொன்னால் போதும் என்று நினைக்கின்றனர் . 9.8% வாட்ஸ்அப் மூலம் தங்கள் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர் . மற்ற 7.6% ஆண்கள் பேஸ்புக் மூலம் சொன்னாலே போதுமானது என்றனர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.