இந்தியாவில் திறந்த வெளி பல்கலைக்கழகம் போன்று திறந்த வெளி கழிப்பிடம் தான் பலருக்கு பிடித்து இருக்கிறது . அதனால் சுகாதாரக் கேடு ஏற்படும் என்று அறிந்து இருந்தாலும் , யாரும் கண்டு கொள்வதாக தெரியவில்லை . அதனால் இதை தடுக்க யாரும் முயற்சியும் எடுப்பதில்லை . ஆனால் செக் குடியரசில் மக்கள் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை தடுக்க வித்தியாசமான முறையை கையாண்டு வருகின்றனர் .
செக் குடியரசு குடிமகன் ஒருவர் இணையத்தில் அப்லோட் செய்த ஒரு போட்டோ ஒன்று இந்த முறையை தெளிவாக விளக்குகிறது . அதாவது பொது இடங்களில் யாரேனும் சிறுநீர் கழித்தால் அதனை அங்கு இருக்கும் ஒரு கேமரா வீடியோ எடுத்து உடனடியாக யு-ட்யுபில் அப்லோட் செய்துவிடும் .
ஆனால் இதை எந்த அளவுக்கு அங்கு பயன்படுத்துகின்றனர் என்ற விவரம் தெரியவில்லை .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.