ஐஸ் பக்கெட் சேலஞ்ச் , இந்த சேலஞ்சை தெரியாத மக்கள் கண்டிப்பாக மிக குறைவான எண்ணிக்கையில் தான் இருப்பார்கள் . குறைந்த காலத்தில் பிரபலமான இந்த சேலஞ்சை அனைவரும் ஆர்வத்துடன் செய்து வருகின்றனர் . ஆனால் அதன் முக்கியமான காரணமான நன்கொடை கொடுத்தார்களா என்பது சந்தேகமே . சிலர் இதைப் பொழுது போக்காக தண்ணீரை தூக்கி தலையில் ஊற்றிக் கொண்டு ஐஸ் பக்கெட் சேலஞ்ச் என்று சொல்லுகின்றனர் .
அதேப் போன்று ஸ்காட்லாந்தில் உள்ள 135 மக்கள் வசித்து வரும் காலன்செ என்ற தீவில் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் பரவ ஆரம்பித்தது . ஆர்வத்தில் மக்கள் அனைவரும் பக்கெட் தண்ணீரை தலையில் ஊற்றிக் கொண்டனர் . இதனால் அந்த தீவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது . தண்ணீரை சிறிது காலம் அடைத்து உள்ளனர் , இதனால் இப்போது தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர் .
மேலும் சில கடைகளில் ஐஸ் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.