வயகரா இந்த வார்த்தை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள்
அனைத்திலும், உலக மக்கள் அனைவருக்கும் தெரிந்த வார்த்தை. திடீரென்று உடனடி
நடவடிக்கையாக உணர்ச்சி நரம்புகளைத் தூண்டி, காமத்தை அனுபவிக்க உதவும் ஒரு
மருந்தின் பெயர். இவ்வயகரா மாத்திரைக்கு எவ்வளவு அதிக வேகமும், அதிக
சக்தியும் உள்ளதோ அவ்வளவு வேகமாக மனிதனின் ஆரோக்கி யத்தை அழிக்கும்
சக்தியும் உண்டு என்பதும் உண்மை.
வருங்காலத்தில் மருத்துவ உலகம் ஆராய்ந்து, அனுபவித்த பின் வயகராவிற்குத் தடை விதிக்காமல் இருக்க முடியாது என்பதும் உண்மை. முருங்கையும், மூலிகையும் வயகராவை விட இரண்டல்ல பத்தல்ல. ஆயிரம் மடங்கு சிறந்தவை, உயர்ந்தவை, உகந்தவை. ஆயிரம் முறை போகம் (உடலுறவு) செய்தாலும், உடற்கட்டு சிறிதும் குறையாமல் இருந்ததால் பழனிசித்தருக்கு போகர் என்று பெயர் வந்தது. அவர் சீனா சென்று பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். அந்நாட்டிலும் அவருக்குப் போகர் என்றே பெயர் இருந்ததாகக் கூறப்படுகிறது.இது என் நண்பன் மிதுன் கூற நான் தெரிந்த உண்மை.
மூலிகைகள் உண்டு அதிக போகத்தில் (உடலுறவில்) ஈடுபட்டதால் போகர் என்றே பெயர் பெற்றார். அவர் சொன்ன மூலிகைகளில் முருங்கை எப்படி வயகரா போல் வேலை செய்கிறது என்பதைப் பார்ப்போம். முருங்கையின் அனைத்து உறுப்புகள் மற்ற மருந்துப் பொருளோடு சேர்ந்தால் வயகராவை விட பன்மடங்கு பயனளிக்கிறது. 64 கலைகளில் பாலுறவு என்னும் காமச்சூத்திரக் கலையும் ஒன்று. மிக உயர்ந்த உன்னதக் கலையை மிருகங்கள் ஒன்றோடொன்று இணைந்து தன் உடலிச்சையைத் தீர்த்துக் கொள்வதுபோல், அனுபவிப்பதில் பயனில்லை. மனிதனும் வயகரா மருந்துண்டு 10 நிமிடம் மிருகவெறியுடன் புணர்ச்சியில் ஈடுபட்டால் மிருகத்திற்கும், மனிதனுக்கும் வேறுபாடில்லை. சிலை, சிற்பம், சித்திரங்களில் உள்ளது போன்று நூற்றுக்கும் மேற்பட்ட விதவிதமான வகைகளில் மாற்றி மாற்றி உடலுறவு சுகங்களை அனுபவிக்கும் போதுதான் மனிதனின் ஐம்பொறிகளின் உணர்வுக்கும், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பவைகளால் ஈர்க்கப்பட்டு, உடலுக்கும், மனத்திற்கும் பலவிதமான சுவைகளைச் சுவைத்து, உள்மனம் என்ற உயிர் ஜீவன் ஏகாந்த நிலையையும், இன்பத்தையும் அடைய முடியும்.
ஆண்தன்மை அதிகரிக்க :
முருங்கைக் கீரை, முருங்கைப்பூ, இவ்விரண்டும் சம அளவில் சேர்த்து, சிறுசிறு துண்டுகளாக வெட்டி, வதக்கி, பொரித்து, அதில் வேர்க்கடலையை வறுத்துப் பொடி செய்து, தூவி உணவுடன் சேர்த்துண்ண ஆண்தன்மை அதிகரிக்கும்.. விறைப்பு நீடிக்கும், வேகமும் பெருகும், வானளவு இன்பத்தைப் பெண்ணுக்கு வாரி வழங்கிட ஆண்தன்மை வந்து துள்ளும்,
முருங்கைக் கீரை, முருங்கைப்பூ, இவ்விரண்டும் சம அளவில் சேர்த்து, சிறுசிறு துண்டுகளாக வெட்டி, வதக்கி, பொரித்து, அதில் வேர்க்கடலையை வறுத்துப் பொடி செய்து, தூவி உணவுடன் சேர்த்துண்ண ஆண்தன்மை அதிகரிக்கும்.. விறைப்பு நீடிக்கும், வேகமும் பெருகும், வானளவு இன்பத்தைப் பெண்ணுக்கு வாரி வழங்கிட ஆண்தன்மை வந்து துள்ளும்,
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.