சிரியா, இராக் நாடுகளில் பெரும்பான்மையான பகுதிகளை
கைப்பற்றியுள்ள இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிராக உலக
நாடுகள் ஒன்றிணைந்துள்ளது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். இது குறித்து வாஷிங்டனில் அவர் கூறியது: இது அமெரிக்காவின் தனிப்பட்ட சண்டையல்ல. சிரியா, இராக் போன்ற நாடுகளில்
எங்களது தரைப் படையினர் சண்டையிட நான் உறுதிபூணவில்லை. வரும் காலங்களில்
கூட்டணி நாடுகள் பாதுகாப்புடன் இருப்பதற்காக உதவிகளை வழங்கத் தயாராக
உள்ளோம்.
ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக எங்களது விமானங்களை உபயோகப்படுத்த உள்ளோம். கூட்டணி நாடுகளின் வீரர்களை பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகத் தயார் படுத்தவும், ஆயுத உதவிகளையும் வழங்கவும் உள்ளோம்.
பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக உலக நாடுகள் அடங்கிய குழுவை வழிநடத்தத் தயாராக உள்ளோம். இந்தக் குழுவில் இடம்பெறும் நாடுகள், அதிக அளவிலான தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என்று ஒபாமா தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐ.நா.சபை கூட்டத்தில் இது குறித்து ஒபாமா வலியுறுத்தி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.