மோடி தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் , காஷ்மீரில் வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு உதவுங்கள் என தனது நலனை விரும்புவர்களிடம் தெரிவித்து இருந்தாலும் , டிவிட்டரில் தனக்கு வாழ்த்தியவர்களுக்கு அவர் ஏமாற்றம் அளிக்க விரும்பவில்லை . அவர் தனக்கு வாழ்த்து தெரிவித்த சில சாதாரண குடி மகன்களுக்கு மீண்டும் நன்றி என டிவிட் செய்துள்ளார் . இதனைப் பெற்ற பலர் மகிழ்ச்சி மற்றும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .
செப்டம்பர் 17 ஆம் தேதி மோடியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது . அன்றைக்கு அவருக்கு பிஸியான நாளாக இருந்தது . பிரதமராக பதவியேற்ற பின் முதன் முதலாக குஜராத் சென்ற மோடி இரண்டு பெரிய திட்டங்களை அறிவித்தார் . பின்னர் சீனாவின் குடியரசு தலைவருடன் சந்திப்பு நடந்தது .
பின்னர் குஜராத்தில் இருந்து டில்லியில் வரும் வழியில் தனக்கு டிவிட்டரில் வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தார் . மேலும் ஜப்பான் பிரதமரின் வாழ்த்தை ரீடிவிட் செய்து அவருக்கு நன்றி தெரிவித்தார் . அவர் தனக்கு வாழ்த்திய 50 நபர்களுக்கு ரீப்ளே செய்தார் . இதனால் அவரின் பக்கதிற்கு அப்போது டிராபிக் வேகமாக கூடியது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.