இரயில் பயணத்தின் போது பலர் அங்கே கொடுக்கப்படும் உணவைப் பற்றி குறை கூறுவார்கள் . அதனால் மக்களுக்கு பிடித்த உணவை நல்ல சுவையில் பறிமாற இந்தியன் ரயில்வேஸ் புதிய சேவையை தொடங்க உள்ளது . இந்த சேவையின் மூலம் பயணிகள் தங்கள் மொபைல் மூலம் எஸ்.எம்.எஸ் அனுப்பி தங்களுக்கு வேண்டிய உணவை பெற்றுக் கொள்ளலாம் .
இந்த சேவையை குறிப்பிட்ட சில இரயில்களில் மட்டும் செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளனர் . இந்த இணைய சேவையை ஒருங்கிணைக்கும் ஐ.ஆர்.சி.டி.சி இந்த சேவைக்காக தனியே ஒரு நம்பரை பெற்று உள்ளது . சாப்பாடு தொடர்பாக நிறைய குறைகள் வருவதால் , இரயில்வேஸ் இந்த புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது .
பயணிகள் தங்கள் பி.என்.ஆர் நம்பரை தங்கள் மொபைல் மூலம் இதுக்கென ஒதுக்கப்பட்டு இருக்கும் எண்ணுக்கு அனுப்பினால் அவர்களின் பி.என்.ஆர் ஆன்லைனில் செக் செய்யப்படும் . இந்த செக்கிங் முடிந்த பின் அவர்களுக்கு கால் வரும் . அந்த கால் மூலம் அவர்கள் தங்களுக்கு வேண்டியவற்றை ஆர்டர் செய்து கொள்ளலாம் . ஆனால் பழைய பேன்ட்ரி சேவைகள் தொடர்ந்து இயங்கி கொண்டு தான் இருக்கும் .
விரைவில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வதற்கான சேவையையும் தொடங்க இரயில்வேஸ் திட்டமிட்டு வருகிறது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.