இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடித்து
வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்கக் கூடாது என்று
கூறியதுடன், மீனவர்களுக்கு எதிராக தொலைக்காட்சியில் பேட்டியளித்த பாஜக
மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி
தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த மீனவர் ராமேசுவரம் டி.எஸ்.பி.யிடம் புகார்
மனு கொடுத்தார்.இலங்கைக் கடற்படையினரிடம் படகுகளைப் பறிகொடுத்து வாழ்வாதாரங்களை
இழந்துள்ள தமிழக மீனவர்களைப் பற்றி சுப்பிரமணியன் சுவாமி தொலைக்காட்சியில்
விமர்சித்துள்ளார்.
ராமேசுவரம் மீனவர்கள் கடலில் மீன் வளத்தை அழித்து, அத்துமீறி இலங்கை கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்வதாகவும், அதனால் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து வைத்துள்ள படகுகளை விடுவிக்கக் கூடாது எனவும் பேட்டியில் தெரிவித்துள்ளார். இதனைக் கண்டித்து மீனவர்கள் அவரது உருவபொம்மைகளை எரித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், தாய்நாட்டுக்கு எதிராகவும், இலங்கைக்கு ஆதரவாகவும் பேசிய சுப்பிரமணியன் சுவாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த சேவியர் மகன் மீனவர் நல்லதம்பி ராமேசுவரம் டி.எஸ்.பி.யிடம் வெள்ளிக்கிழமை புகார் மனு கொடுத்தார்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.