மங்குஸ்தான் பழம் இது மலேசியா,
இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. இந்தியாவில்
தென்னிந்தியாவில் மலைப்பகுதியில் தோட்டப்பயிராக இது விளைகிறது. தென்
அமெரிக்க நாடுகள், பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளிலும் இது விளைகிறது.
மங்குஸ்தான் பழம் மலைப் பகுதியில் விளையக்கூடியவை, இந்தப்பழத்தின் தோல்
தடிப்பாக இருக்கும். பழம் நீலம் கலந்த சிவப்பு கலரில் இருக்கும்.
இப்பழத்தின் தோல் பகுதியை உடைத்தால் நுங்கு போன்று நான்கு அல்லது ஐந்து,
ஆறு சுளைகள் சுளைகள் இருக்கும். சுளைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்திலும்
இருக்கும்.
மங்குஸ்தான் பழம் பல நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதாக
கூறப்படுகிறது. இருமலை தடுக்கும் சூதக வலியை குணமாக்கும் தலைவலியை
போக்கும் நாவறட்சியை தணிக்கும்.
மங்குஸ்தான் பழத்தில்
நீர் (ஈரப்பதம்) - 83.9 கிராம்
கொழுப்பு - 0.1 கிராம்
புரதம் - 0.4 கிராம்
மாவுப் பொருள் - 14.8 கிராம்
பாஸ்பரஸ் - 15 மி.கி.
இரும்புச் சத்து - 0.2 மி.கி
உடலுக்குத்தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்ட இப்பழத்தை உண்டு
பயனடைவோம். இது கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு பயனடையவும். மே,
ஏப்ரல், ஜீன், ஜீலை மாதங்களில் கிடைக்கும். இது குற்றால சீசன் மாதங்களில்
அங்கு அதிகமா விற்பனையாகும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.