எப்போதும் அமைதியாக இருக்கும் தோனி அரிய நிகழ்ச்சியாக கோபம் அடைந்து தான் தங்கியிருந்த 5 - ஸ்டார் ஹோட்டலை விட்டு வெளியேறி வேறு ஹோட்டலில் தங்கினர் . அம்பாடி ராயுடு வீட்டில் செய்யப்பட்ட பிரியானியை ஹோட்டலில் சாப்பிட அனுமதிக்கப்படாததால் அவர்கள் வெளியேறியதாக கூறப்படுகிறது .
இந்த சம்பவம் சென்னை அணி கோல்கத்தா அணியுடன் தோற்றப் பின் நடந்தது . ஹைதராபாத்தில் ஹோட்டல் கிரான்ட் ககாடியா ஹோட்டலில் சென்னை அணியினருக்கு ரூம் புக் செய்யப்பட்டு இருந்தது . அப்போது ஹைதராபாத்தில் வசிக்கும் சக வீரரான அம்பாடி ராயுடு வீட்டில் செய்யப்பட்ட பிரியாணி அனுப்பப்பட்டது . ஆனால் அந்த ஹோட்டலில் வெளியில் இருந்து வரும் பொருட்களை சாப்பிட அனுமதி இல்லை . இதனால் ராயுடுவின் பிரியாணி அனுமதிக்கப்படவில்லை . இதனால் தோனி கோபமடைந்து தனது அணியுடன் தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் சென்று தங்கினார் .
ஆனால் ஹோட்டல் நிர்வாகத்தினர் பிரியானி தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்று இன்னும் தெரிவிக்கவில்லை . அவர்கள் அளித்த அறிக்கையின்படி அவர்கள் வீரர்களின் அறையில் வைத்து சாப்பிட்டுக் கொள்ள அனுமதி அளித்ததாகவும் , ஆனால் தோனி பெரிய பார்ட்டி அறை ஒன்றில் அனுமதி கேட்டதாகவும் தெரிவித்து உள்ளனர் ,
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.