ஆம் ஆத்மி கட்சி தலைவர் மயாங் அகர்வால் மற்றும் வேறு ஐந்து நபர் மீது பாலியல் துன்புறுத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக 21 வயது பெண் கட்சி தன்னார்வ ஊழியர் பூகார் கொடுத்துள்ளார் .
போலிஸ் அதிகாரி கூறுகையில் , " ஆம் ஆத்மியின் தருண் சிங் மீது இந்திய குற்றப் பிரிவு செக்சன் 354 , 506, 509 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்ய்ப்பட்டுள்ளது . மயாங் காந்தி மற்றும் நான்கு பேர் மீது பாலியல் துன்புறுத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது " என்றார் .
இது குறித்து காந்தி தெரிவிக்கையில் , " இந்த வழக்கு அரசியல் பார்வையில் உருவாக்கப்பட்டுள்ளது . அந்த பெண் என்னிடம் தருண் சிங் குறித்து பூகார் அளித்தவுடன் நான் விரைந்து செயல்பட்டு அவரை கட்சியில் இருந்து விலக்கி விட்டேன் . மேலும் அந்த பெண்ணிடம் வேண்டுமென்றால் போலிசில் பூகார் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டேன் ஆனால் அவர் மறுத்து விட்டார் " என்றார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.