பார்டியுன் ( fortune ) நாளிதழ் வெளியிட்ட ஆசிய பசிபிக் பகுதிகளில் உள்ள அதிக சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்தியாவில் இருந்து 8 பெண்கள் இடம் பெற்றுள்ளனர் .
ஐ.சி.ஐ.சி வங்கியின் தலைவர் சந்தா கோச்சார் இந்த பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார் . இந்தியாவில் இவர் தான் முதலிடம் . எஸ்.பி.ஐ இன் அருந்ததி பட்டார்ச்சார்யா இந்த பட்டியலில் 4 ஆம் இடம் பிடித்தார் . ஐந்தாவது மற்றும் பத்தாவது இடத்தில் முறையே எச்.பி.சி.எல் இன் நிஷி வாசுதேவா மற்றும் ஆக்சிஸ் வங்கியின் ஷிகா ஷர்மா இடம் பிடித்தனர் . இவர்கள் டாப் 10 பட்டியலில் இடம் பெற்று இருந்தனர் .
இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் கெய்ல் கெல்லி முதல் இடம் பிடித்த்தார் .
பட்டியலில் இடம் பெற்ற மற்ற இந்தியர்கள்
கிரண் மஸ்முதர் ஷா - 19
சித்ரா ராமகிருஷ்னா - 22
நைனா லால் கித்வாய் - 23
மல்லிகா ஸ்ரீனிவாசன் - 25
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.