BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 5 September 2014

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேர ஹைதராபாத்தில் இருந்து கிளம்பிய 4 கல்லூரி மாணவர்கள் !!



பொறியியல் கல்லூரியில் இருந்து டிராப் அவுட் ஆன 4 ஹைதராபாத் மாணவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் சேர்ந்து தனி இஸ்லாமிய நாட்டினை பெற ஈராக்கில் போரிட பயணிக்கும் வழியில் பிடிபட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர் .

நேற்று அல்-கொய்தா  இந்தியாவில் புதிய கிளை தொடங்கப்பட்டுவிட்டது என அறிவித்ததால் , மத்திய அமைச்சகம் பாதுகாப்பை அதிகரிக்க அறிவுறுத்தி இருந்தது . ஹைதராபாத் போலிஸ் கொடுத்த தகவலின்படி 4 மாணவர்கள் ஞாயிற்றுக் கிழமை கொல்கத்தாவில் வைத்து பிடிபட்டனர் . அவர்கள் வங்கதேசத்தை கடந்து பின் ஈராக்கில் போரிட திட்டம் போட்டதாக ஒப்புக் கொண்டனர் .

அவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் நடந்த பிரச்சாரத்தால் இந்த முடிவை எடுத்ததாக கூறினர் . ஏற்கனவே தனி இஸ்லாமிய நாடு அடைவதற்காக ஆன்லைனில் ஆட்கள் எடுக்கப்பட்டு வருவதாக உளவுத்துறை எச்சரித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது .




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media