50 பயணிகளுடன் சென்று கொண்டு இருந்த பேருந்து , நேற்று காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் , வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது .இன்னும் 40க்கும் மேற்பட்ட பயணிகளின் நிலைமை என்னவென்று தெரியவில்லை .
வெள்ளப் பெருக்கு அதிகமாக இருப்பதால் அதிக எண்ணிக்கையில் பயணிகள் இறந்து இருக்கலாம் என உள்ளூர் போலிசார் தெரிவித்துள்ளனர் . பேருந்தில் இருந்து வெளியே குதித்த 4 பயணிகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர் . அந்த 4 பேரில் ஒருவர் ஓட்டுநர் இன்னொருவர் நடத்துனர் .
கடந்த சில தினங்களாக காஷ்மீரில் கடும் மழை பெய்து வருகிறது . 22 வருடங்களுக்கு பின் இப்போது தான் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.