மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் 1,600 மாணவர்களின் உயிர் இன்று மோடியின் முதல் ஆசிரியர் தின உரையால் காப்பாற்றப்பட்டது .
150 வருடங்கள் பழமையான அந்த பள்ளியின் மேற்கூரை இன்று இடிந்து விழுந்தது . இந்த சம்பவம் ஒரு 10.20 மணி போல நடந்தது . ஆனால் இன்று மட்டும் மோடியின் சிறப்பு ஆசிரிய தின உரையைக் கேட்க மாணவர்கள் அனைவரையும் அந்த இடத்தில் 12:00 மணிக்கு வரச் சொன்னதால் மாணவர்களின் உயிர் காப்பாற்றப்பட்டது . பொதுவாக அந்த இடத்தில் 10:00 மணி அளவில் மாணவர்கள் கூட்டம் அலை மோதிக் கொண்டு இருக்கும் .
இன்று சிறப்பு உரையைக் கேட்க மாணவர்கள் அனைவருக்கும் நேரங்கள் தள்ளி வைக்கப்பட்டது . அதனால் அந்த இடத்தில் கூரை இடிந்து விழும் போது ஒருவரும் இல்லை . எனவே 1,600 மாணவர்களும் காப்பாற்றப்பட்டனர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.