இன்று வீட்டுக் குளிர்சாதனப்பெட்டியில் வெயில் காலமோ, மழைக்காலமோ
எப்போதும் இரண்டு லிட்டர் கலர் பாட்டில் இருக்கிறது.
உப்புமா சாப்பிடுவதாக இருந்தால் கூட ஒரு டம்ளர் கலர் ஊற்றி
குடிக்கிறார்கள். 'நான் சோடா கலர்
குடிப்பது இல்லை. பாட்டிலில் அடைக்கப்பட்ட
பழச்சாறுகளைத்தான் குடிக்கிறேன்’ என்று ஒரு பிரிவினர்
பெருமையடித்துக்கொள்கிறார்கள். 'கழுதை விட்டையில்
முன்விட்டை என்ன. பின் விட்டை என்ன?’ என்று கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள அதுபோல உடலைக் கெடுப்பதில் கார்பனேட்டட் குளிர்பானங்களும் பாக்கெட் பழச்சாறுகளும்
ஒன்றுபோலதான்.
ரெடிமேட்
பழச்சாறில், 10 சதவிகிதம்
மட்டுமே பழச்சாறு உள்ளது. மீதமெல்லாம், சர்க்கரை, நீர், செயற்கை நிறங்கள், சுவையூட்டிகள்
மட்டுமே.
ஒரு குளிர்பான நிறுவனம் ஆண்டுக்கு 300 கோடி
விளம்பரத்துக்கு செலவு செய்கிறது. 50 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு லிட்டர் குளிர்பானம்
தயாரிப்பதற்கு விநியோகச் செலவு உள்பட சேர்ந்து 5 முதல் 7 ரூபாய் ஆகக்
கூடும் என்கிறார்கள் ஒரு லிட்டருக்கு 43 ரூபாய் லாபம் என்றால், ஆண்டுக்கு
விற்பனையாகும் 430 கோடி பாட்டில்களுக்கு எவ்வளவு பணம் என்று நீங்களே கணக்குப்
போட்டு பார்த்துக்கொள்ளுங்கள்.
குளிர்பானச் சந்தை வெறும் தாகம் தணிக்கும்
விவகாரம் இல்லை.
அது உடலைக்
கெடுப்பதில் பன்னாட்டு நிறுவனங்களின் யுத்த களம். இரண்டு முக்கிய
அமெரிக்க நிறுவனங்களே இந்தியக் குளிர்பானச் சந்தையின் 70 சதவிகிதத்தை தனது கையில் வைத்திருக்கின்றன . பிரபல நடிகர்கள் கிரிக்கெட் வீரர்கள், பாடகர்கள் என
அத்தனை பேரும் அவர்கள் கையில் ,இந்த குளிர்பானங்கள் எல்லாம் மக்களுக்கு கேடு விளைவிப்பதைத்தவிர வேறொன்றையும் செய்வது இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.