பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவர் தனது பழைய காதலிக்கு 21,807 முறை போன் மற்றும் மெசெஜ் செய்து தொல்லை கொடுத்ததால் காதலன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார் .
அவருக்கு 10 மாத சிறை தண்டனையும் , 1000 யுரோ அபாராதமாகவும் விதிக்கப்பட்டது . அவருக்கு மனநிலை ரீதியாகவும் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது . அவரின் பழைய காதலியுடன் எந்த விதமான தொடர்பிலிம் இருக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது .
அந்த பழைய காதலனும் தான் போன் செய்ததை ஒப்புக் கொண்டார் . இவர்கள் காதல் 2011 ஆம் ஆண்டு பிரியும் போதும் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
காதலன் கூறுகையில் " நான் அவளிடம் இருந்து எங்கள் வீட்டினை சரி செய்ய சரி பாதி பணத்தைக் கேட்கவும் அல்லது அவளிடம் இருந்து நன்றி என்ற ஒரு வார்த்தையை எதிர்பார்த்து தான் அவளுக்கு தொடர்ந்து கால் செய்து கொண்டு இருந்தேன் " என்றார் . இறுதியாக தான் செய்தது மிகப்பெரிய முட்டாள்தனம் என்றும் ஒப்புக் கொண்டார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.