மத்திய பிரதேச மாநிலத்தில் குவாலியர் நகரில் உள்ள கூட்டுறவு வங்கியில் கடைநிலை ஊழியராக பியூனாக பணியாற்றி வரும் ஒருவரது வீட்டில் இன்றுஅதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது அவரிடம் ஆறு வீடுகளும் இரண்டு சொகுசு கார்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வங்கியில் 1983 ஆம் ஆண்டு முதல் பியூனாக பணிபுரிந்து வருபவர் குல்தீப் யாதவ்(40), வேடிக்கை என்ன வென்றாள் இவர் 30 ஆண்டுகளாக எந்த பணி உயர்வும் இல்லாமல் பியூனாகவே இருந்து வருகிறார்.
குல்தீப் யாதவ் குறித்து ஒரு மொட்டை கடிதம் மூலம் யாரோ ஒருவர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அவரது சொத்துகள் குறித்து தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில், இன்று அதிகாலை 3 மணி அளவில் அவரது வீட்டில் லோக் அயுக்தா அல்லது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் இரண்டடுக்கு பங்களா மற்றும் நான்கு வீடுகள் மற்றும் இரண்டு சொகுசு கார்கள் மற்றும் வங்கி லாக்கர்களில் இருந்த ரொக்கப்பணம் மற்றும் தங்க நகைகள் ஆகியவற்றுக்கான ஆவணங்களை கைப்பற்றினர். அவரது வீட்டில் தொடந்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவு வரை இந்த சோதனை நீடிக்கும் என தெரிகிறது. குல்தீப் யாதவின் சொத்தின் மதிப்பீடு சுமார் 7 கோடிக்கும் மேல் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வங்கியில் பியூனுக்கு மாத சம்பளம் ரூ 20 ஆயிரத்துக்கு மேல் இருக்காது, என்றும் இந்த 30 ஆண்டுகளில் அவரால் 15 முதல் 17 லட்சத்துக்கு மேல் சம்பாதித்திருக்க முடியாது ஆனால் இவரது சொத்து மதிப்பு 7 கோடி என்றால் என்னென்ன முறைகேடுகள் செய்து இதை சம்பாதித்தார் என்று இனி தான் விசாரிக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.