வருகிற ஆசிரியர்கள் தினத்தன்று நரேந்திர மோடி அனைத்து மாணவர்களிடமும் உரையாட இருக்கிறார் . இதனை குறித்து காங்கிரஸ் தலைவர் அமரிந்தர் சிங் கூறுகையில் , " பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஓபாமாவை கிட்டதட்ட அனைத்து விஷயங்களிலும் காப்பி அடித்து வருகிறார் " என்றார் .
காங்கிரஸின் துணை மக்களவை தலைவரான அமரிந்தர் சிங் கூறுகையில் , " ஆசிரியர்கள் தினத்தில் மோடி , ஆசிரியர்களுடன் கலந்துரையாடாமல் மாணவர்களுடன் கலந்துரையாடுவது விந்தையாக இருக்கிறது . இதேப் போன்று தான் ஓபாமா 2009 ஆம் ஆண்டு செய்தார் . மோடி ஓபாமாவை அவசர அவசரமாக காப்பி அடித்து வருகிறார் . " என்றார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.