மேட்டுப்பாளையம், செப்.30: உதகை மலை ரயில் பாதையில்
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து,
இன்று உதகை மலை ரயில் இயக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மேட்டுப்பாளையம், குன்னூர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கல்லாரை அடுத்த ஹில்குரோவ் ரயில் நிலையம் அருகே ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு, பெரிய பாறைகள் விழுந்தன. இதையடுத்து, உதகை மலை ரயில் திங்கள், செவ்வாய்க்கிழமை இரண்டு நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டது. 25-க்கும் மேற்பட்ட ரயில்வே தொழிலாளர்கள், ரயில் பாதையில் கிடந்த மண், கற்களை அகற்றியும், பாறைகளை வெடிவைத்து தகர்த்தும் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
செவ்வாய்க்கிழமை மாலையில் இப் பணிகள் முடிந்ததையடுத்து, மலை ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இன்று முதல் உதகை மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து வழக்கம்போல் இயங்குமென அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.