சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, தமிழ்த் திரையுலகினர் மவுன உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு (புதன்கிழமை) காலை 9 மணி அளவில் தமிழ்த் திரையுலகினர் மவுன உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். இதில், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், கேயார், சத்யராஜ், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன், எஸ்.ஜே. சூர்யா, பிரபு, விக்ரம் பிரபு, சிபிராஜ், அபிராமி ராமநாதன், நடிகை சச்சு, நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா உள்ளிட்ட நடிகர் நடிகைகள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இதில் விக்ரம் கலந்து கொண்டார்கள். ஆனால் விக்ரம் விருப்பப்பட்டு இந்த போராட்டத்துக்கு செல்லவில்லை. அவரை கட்டாயப்படுத்தி இதற்கு அனுப்பி வைத்துள்ளார்கள். 'ஐ' படக்குழுவினர் தான் அவரை கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார்கள். ஐ படத்தின் உரிமையை ஜெயா டிவி நிறுவனம் தான் வாங்கியுள்ளார்கள். அதற்கான அட்வான்ஸ் மட்டும் தான் வந்துள்ளது. இன்னும் 70 சதவீத தொகை மீதி உள்ளது. இப்போது விக்ரம் இந்த போராட்டத்திற்கு செல்லாமல் இருந்தால் அதனால் ஆளும்கட்சியினர் கடுப்பாகி விடுவார்கள். அந்த காரணத்துக்காக அவரும் சென்று விட்டார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.