பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக இந்தியாவும், அமெரிக்காவும்
கூட்டாக நடவடிக்கை எடுக்கும். பேரழிவு ஆயுதங்கள் பரவலை இரு நாடுகளும்
இணைந்து தடுக்கும்'' என்று இந்தியா-அமெரிக்கா சார்பில் செவ்வாய்க்கிழமை
வெளியிடப்பட்ட தொலைநோக்குத் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 26ஆம் தேதி முதல் பிரதமர் நரேந்திர மோடி
சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த பயணத்தின் முதல் கட்டமாக,
நியூயார்க்கில் 26ஆம் தேதி முதல் அவர் 3 நாள்கள் சுற்றுப்பயணம் செய்தார்.
அப்போது அவர், ஐ.நா. பொதுச் சபைக் கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து
கொண்டு பேசினார்.
இலங்கை அதிபர் ராஜபட்ச, நேபாளப் பிரதமர் சுஷீல் கொய்ராலா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களையும் மோடி சந்தித்துப் பேசினார்.
அதைத் தொடர்ந்து, நியூயார்க் பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்க அதிபர்
ஒபாமாவுடனான விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக
வாஷிங்டனுக்கு மோடி செவ்வாய்க்கிழமை வந்தார். ஒபாமாவுடன் விருந்து
நிகழ்ச்சியில் மோடி பங்கேற்பதற்கு முன்னதாக இந்தியா - அமெரிக்கா சார்பில்
தொலைநோக்குத் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்தியா-அமெரிக்கா இடையிலான
ஒத்துழைப்பின் மூலம், அமைதி, மேம்பாடு அடைவதற்கு முயற்சிக்கப்படும். தீவிர
ஆலோசனைகள், கூட்டுப் பயிற்சிகள், தொழில்நுட்பப் பரிமாற்றம், பாதுகாப்பு
துறையில் ஒத்துழைப்பு ஆகியவற்றில் இரு நாடுகளும் ஒத்துழைத்து செயல்படுவதால்
இந்தப் பிராந்தியத்தையும், உலகத்தையும் பாதுகாப்பாக திகழச் செய்ய
முடியும். பல்வேறு கலாசாரங்கள், நம்பிக்கைகள் கொண்ட சிறந்த ஜனநாயக நாடுகளாக
இந்தியாவும், அமெரிக்காவும் உள்ளன. அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து
செயல்படுவது இரு நாடுகளுக்கும் மட்டுமல்லாமல் உலகத்துக்கே நன்மையைத் தரும்.
இரு நாடுகளும் இணைந்து தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக நடவடிக்கை
எடுக்கும். மேலும், இரு நாடுகளிலும், பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழாமல்
தடுக்கப்படும். மனித குலத்துக்கு பேரழிவுகள் ஏற்படும்போதும், பிரச்னைகள்
ஏற்படும்போதும் இரு நாடுகளும் இணைந்து விரைந்து நடவடிக்கை எடுக்கும்.
பேரழிவு ஆயுதங்கள் பரவலை இரு நாடுகளும் இணைந்து தடுக்கும். அணு ஆயுதக்
குறைப்பில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும். 21ஆம் நூற்றாண்டில் இந்தியாவும், அமெரிக்காவும் நம்பிக்கையான
கூட்டாளிகளாகத் திகழ்கின்றன. இரு நாடுகளிடையேயான நட்புறவு என்பது,
உலகத்துக்கே எடுத்துக்காட்டாகும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.