ஃபேஸ்புக்கில் அதிமுகவுக்கும் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கும் ஆதரவு தெரிவித்து நீண்ட காலமாக எழுதி வருபவர் கிஷோர் கே ஸ்வாமி, பல நேரங்களில் அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களை எழுதுவார், கவுன்சிலர்கள் வட்டச்செயலாளர்கள் முதல் அமைச்சர்கள் வரை அத்தனை பேரின் உள் விவகாரங்களை ஃபேஸ்புக்கில் எழுதி அம்பலப்படுத்துவார்.
சில நாட்களுக்கு முன் தான் அவரது ஃபேஸ்புக் ஐடி முடக்கப்பட்டது, உடனடியாக இன்னொரு ஐடி தொடங்கிய அவர் தொடர்ந்து எழுதி வருகிறார். அவரது புதிய ஐடி https://www.facebook.com/kishorekswamy1

27ம் தேதி முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்ட அன்றே அதிமுக ஆதரவாளராக இருந்தும் கிஷோர் மீது அதிமுகவினர்களில் சிலரே தாக்க முயற்சித்துள்ளனர், அப்போது ஆட்டோவில் ஏறி தப்பியோடிய கிஷோர் இன்று வள்ளுவர் கோட்டம் எதிரில் ஜெயலலிதாவை விடுதலை செய்ய கோரி நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற போது கூட்டத்தில் வைத்து 15 பேர் கிஷோர் கே ஸ்வாமியை தாக்கியுள்ளார்கள், இவர்களும் அதிமுகவினர் என்றே கூறப்படுகிறது.

சமீபத்தில் சென்னை வட்டச்செயலாளர் ஒருவர் திமுகவினருடன் கூட்டாக செயல்படுவதை கிஷோர் அம்பலப்படுத்தியதால் அவர் தான் ஆள் வைத்து செய்திருப்பார் என்றும் ஒரு பேச்சு உலவுகிறது, மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த கிஷோர் இது குறித்து காவல்துறையில் புகார் செய்துள்ளார்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.