பிறந்தவர்கள் அனைவரும் இறந்து தானே ஆக வேண்டும்
நான் செத்துடுவேன் என்று அழகிரி சொன்னதை பெரிதாக எடுக்கவில்லை.
அண்ணன் உருவ பொம்மையை எரிக்கக் கூடாது! - ஸ்டாலின் அறிக்கை
இன்னும் 3-4 மாதங்களில் மு.க.ஸ்டாலின் இறந்துவிடுவார் என்று திமுக தலைவர் கருணாநிதியிடம் மு.க.அழகிரி கூறியதாக கருணாநிதி பேட்டியளிக்க ஸ்டாலின் ஆதரவாளர்கள் சென்னையிலும் சேலத்திலும் அழகிரியின் கொடும்பாவியை எரிக்க ஆரம்பித்தது மட்டுமின்றி கடுமையான வாசகங்கள் கொண்ட போஸ்டர்களை ஒட்டினார்கள், இன்று இது குறித்த அறிக்கை அளித்த ஸ்டாலின் கீழ் கண்டவாறு குறிப்பிட்டார்
தலைவர் கலைஞர் அவர்கள் நேற்றையதினம் செய்தியாளர்களைச் சந்தித்து அளித்த உருக்கமான பேட்டிக்குப் பிறகு தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் கழகத் தோழர்கள் சிலர் அண்ணன் அழகிரியின் உருவ பொம்மையை எரித்ததாக ஏடுகளில் வந்துள்ள செய்தியைப் பார்த்து நான் வேதனைப்படுகிறேன். அரசியல் நாகரிகத்தைச் சவாலுக்கு அழைக்கும் இப்படிப்பட்ட செயலை கழகத்திலே யார் செய்தாலும் ஏற்றுக் கொள்ள இயலாது. இது காலம் காலமாக நம்முடைய கழகத்தில் கண்ணும் கருத்துமாகப் பேணப்பட்டு வரும் கட்டுப்பாட்டையும், பண்பாட்டையும் முறியடிக்கின்ற காரியமாகும்.
தலைவர் அவர்களும், பொதுச் செயலாளர் அவர்களும் ஆழ்ந்து சிந்தித்து முறைப்படி நடவடிக்கை எடுத்து வரும் நேரத்தில், ஆர்வம் மிக்க ஒரு சில தொண்டர்கள் ஆத்திரத்திலும், அவசரத்திலும் ஈடுபடும் இத்தகைய செயல்பாடுகள் இயக்கத்தின் கட்டுக்கோப்பினைப் பாதிக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அவர் என்னைப் பற்றிச் சொன்னதைக் கேட்டு, தலைவர் அவர்கள் எந்த அளவிற்கு மனக் காயம் அடைந்திருக்கிறாரோ, அதைப் போல அவரைப் பற்றி நான் கூறியிருந்தாலும் அதே அளவுக்கு வேதனையைத் தான் அனுபவித்திருப்பார். அதைத் தான்
அவரது பேட்டியில் இருவரும் என் மகன்கள் என்பதை விட இருவரும் கழக உறுப்பினர்கள் என்று தெரிவித்தார்கள். தலைவர் அவர்களுக்கு எல்லாவற்றையும் விட கழகமே முதன்மையானது, உயர்ந்தது என்பதை அனைவரும் உணர
வேண்டும்.
அழகிரி என்னைப் பற்றிக் கூறியதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை; பெரிதுபடுத்தவும் விரும்பவில்லை. பிறந்தவர்கள் அனைவரும் இறந்து தானே ஆக வேண்டும். . எனவே கழகத் தோழர்கள் இந்தப் பிரச்சினையை மேலும் ஊதிப் பெரிதாக்குகின்ற வகையில், அவருடைய உருவ பொம்மையை தாக்குகின்ற செயலிலோ, எரிக்கின்ற செயலிலோ, சுவரொட்டி ஒட்டுகின்ற செயலிலோ ஈடுபட்டால், அதுவும் கட்சியின் கட்டுப்பாட்டை அப்பட்டமாக மீறுகின்ற செயலாகி விடும்.
ரவுடிகளையும் புரோக்கர்களையும் அருகில் வைத்துக்கொண்டு வாய்ப்புகளை வீணடித்த அழகிரி
மேலும் படிக்க

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.