சமூக ஜனநாயக கூட்டணி என்று பெயர் வைத்து 10 வேட்பாளர்களையும் அறிவித்து கனஜோராக தேர்தல் வேலையை ஆரம்பித்து நடத்திக்கொண்டுள்ளது பாமக. சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் அதிமுகவுடன் ஒரு முறை செங்கோட்டையன் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை ரகசியமாக நடைபெற்றது.
மாமல்லபுரம் சித்திரை விழாவில் பாமகவினருக்கும் மரக்காணம் பகுதியில் இருந்த விடுதலைசிறுத்தைகளுக்கும் ஏற்பட்ட மோதலையடுத்து பாமகவினர் மீது அதிமுக அரசு கடும் நடவடிக்கை எடுத்ததில் அதன் பிறகு அதிமுக பாமக பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை. தர்மபுரி சம்பவத்தில் பாமகவுக்கு எதிரான கருணாநிதி அவர்களின் பேட்டியும் திமுகவோடும் கூட்டணி வைக்கும் மூடில் இல்லை. இந்நிலையில் இரண்டு முக்கிய கட்சிகளுடனான கூட்டணி சூழல் இல்லாத நிலையில் பாமகவும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று தனித்து வேட்பாளர்களை நிறுத்தியது.
10 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்து வேலைகளும் நடக்கும் நிலையில் பாஜகவுடன் மட்டும் கூட்டணி பேச்சுவார்த்தை ரகசியமாக நடைபெறுகிறது, ஏற்கனவே மதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இணைந்திருக்கும் நிலையில் பாமகவும் இணைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டணி அமைந்தால் மற்ற இரு கூட்டணிகளுக்கும் கடும் போட்டியை உருவாக்கலாம் என்றும் இரு கட்சிகளும் நம்புகிறார்கள்
பாஜக கூட்டணிக்கும் தேமுதிகவை இழுக்க முயற்சி நடைபெற்றாலும் கேப்டனின் கவனம் எல்லாம் திமுக, காங்கிரஸ் கூட்டணியையே விரும்பும் நிலையில் உள்ளார், வெளிப்படையாக திமுக தலைவர் கருணாநிதி அழைப்பை விடுத்தாலும் அதிக இடங்களை பெறுவதற்காக விஜயகாந்த் பதிலை கூறாமல் இழுத்தடிக்கிறார். தமிழகத்தில் கூட்டணி கிட்டத்தட்ட கீழே உள்ளவாறு முடிவடையலாம்.
அ) அதிமுக+ 2 கம்யூனிஸ்ட்கள்
ஆ) திமுக + தேமுதிக+ காங்கிரஸ்+விசிக+மமக+புதிய தமிழகம்
இ) பாஜக+பாமக+மதிமுக
இப்படி ஒரு கூட்டணி அமைந்தால் நீங்கள் எந்த கூட்டணிக்கு வாக்களிப்பீர்கள் என கமெண்ட்டில் தெரிவிக்கவும்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.