ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் எனக் கருதப்பட்டு கைதான முருகன் , சாந்தன் , பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது சுப்ரீம் கோர்ட் . கருணை மனுவை பரிசீலிக்க நீண்ட காலம் எடுத்துக் கொண்டதாக அப்போதைய தலைமை நீதிபதி சதாசீவம் , அவர்கள் அதிக காலம் சிறையில் இருந்து விட்டதால் அவர்களை விடுதலை செய்வது குறித்த முடிவை தமிழக அரசு எடுக்கலாம் என்று தெரிவித்தார் .
இதற்காக தமிழக அமைச்சரவையைக் கூட்டிய தமிழக முதல்வர் ஜெயலலிதா , முருகன் , சாந்தன் , பேரறிவாளன் மட்டும் இல்லாமல் , இவர்களைப் போல அதிக காலமாக சிறையில் இருக்கும் மற்ற 4 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினார் .
தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்தது . இதனால் ஏழு பேரின் விடுதலைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது .
இந்த வழக்கை ஜூலை 7 ஆம் தேதி ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்குழு விசாரிக்கும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.