தங்களுடைய மகிழ்ச்சிகளையும் துக்கங்களையும் பகிர்ந்து கொள்ளும் இடமாக ஃபேஸ்புக் உள்ளது, நடிகை அமலாபால் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்த போது அந்த திருமண போட்டோக்களை உடனுக்குடன் ஃபேஸ்புக்கில் அப்டேட் செய்தார், பல இணையதளங்களும், செய்தி பத்திரிக்கைகளும் அந்த படங்களுடன் தான் அவர்களின் திருமண செய்தியை வழங்கினார்கள்.

அமலாபாலும் விஜய்யும் திருமணம் முடிந்து மாலத்தீவிற்கு ஹனிமூன் கொண்டாட சென்றனர், அப்போது அமலாபால் விஜய்யுடன் மாலத்தீவில் மகிழ்ச்சியுடன் பல படங்களை எடுத்து அவைகளை தனது ஃபேஸ்புக் அக்கவுண்ட்டில் பகிர்ந்து கொண்டார், சந்தோஷமான அந்த படங்களுக்கு பலர் மகிழ்ச்சியாக வாழ்த்துகளும் லைக்கும் தெரிவித்தனர்.
ஆனால் நடிகைகள் என்றாலே கீழ்த்தரமானவர்களாக கருதும் சிலர் மிக ஆபாசமாக அந்த போட்டோக்களுக்கு கமெண்ட் எழுத இதனால் அதிர்ச்சியடைந்த அமலாபால் தனது ஹனிமூன் படங்களை ஃபேஸ்புக்கிலிருந்து நீக்கிவிட்டார், மேலும் சந்தோஷமானவைகளை பகிர்ந்தால் வாழ்த்து சொல்லவேண்டும், ஆனால் இப்படி மனம் புண்படும் படி கமெண்ட் எழுதுகிறீர்களே என்று வேதனை தெரிவித்துள்ளார்.
ஒரு நடிகை திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக இருந்தால் இப்படித்தான் கேவலமாக கமெண்ட் அடிக்கும் வக்கிர எண்ணம் இவர்களுக்கு எப்படி வந்தது? இது குறித்து உங்கள் கருத்துகளை எழுதுங்கள்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.