BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 26 June 2014

ஐ.சி.சி அமைப்பின் தலைவராக என்.சீனிவாசன் நியமிக்கப்பட்டார் !!!



இந்தியாவின் என்.சீனிவாசன் ஐ.சி.சி எனப்படும் உலக கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இன்று நியமிக்கப்பட்டார் . இந்திய கிரிக்கெட் அமைப்பான பி.சி.சி.ஐ அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து உச்ச நீதிமன்றத்தால் நீக்கப்பட்டு இருந்த இவர் , இந்த வார இறுதியில் ஐ.சி.சி அமைப்பின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார் . 

பி.சி.சி.ஐ அமைப்பு இந்தியா சார்பாக என்.சீனிவாசன் பெயரை முன்மொழிந்தது . இந்த முன்மொழிதலை 52 பேர் கொண்ட ஆணையம் ஏற்று கொண்டதால் இன்று அதிகாரப்பூர்வமாக ஐ.சி.சி அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார் .

அவர் அளித்த பேட்டியில் , " இந்த பதவிக்கு தேர்வு பெற்றதை ஒரு மதிப்பாக கருதுகிறேன் . கிரிக்கெட்டின் தூண்களை பலமாக்கவும் , அடிதளத்தை பலமாக்கவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் . கிரிக்கெட் தன்னுடைய புகழை உயர்த்தவும் , அதை தக்க வைத்துக் கொள்வதிலும் அதிக கவனம் செலுத்துவேன் " என்றார் .




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media