ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் நடித்ததால் புகழடைந்த டிவி நடிகர் பாலமுரளி மோகன்(வயது 54) தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார், இவர் தற்போது தென்றல், வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். பாய்ஸ் உட்பட சில படங்களிலும் நடித்துள்ளார்.
‘‘வாளைப்பழ தோல் வழுக்கி வாலிபர் உயிர் ஊஷல்’’, ‘‘தேர்தலில் ஆச்சியை பிடிப்பது யார்ர்ர்ர்ர்ர்’’ நினைவிருக்கின்றதா இந்த காமெடிகளைம், இந்த டிவி இண்டெர்வியூ காமெடியில் விவேக்குடன் நடித்தவருக்கு தான் இந்த பரிதாப முடிவு
சென்னை புரசைவாக்கத்தில் வசித்து வரும் இவர் நேற்று 10 மணிக்கு படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்து தன் படுக்கை அறைக்கு சென்று படுத்துள்ளார், காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அவரது குடும்பத்தினர் வேப்பேரி போலீசில் புகார் செய்தனர். இதை அடுத்து காவல்துறையினர் கதவை உடைத்துக்கொண்டு பார்த்ததில் அங்கு மின் விசிறியில் பாலமுரளி மோகன் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார். அவர் தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இவருக்கு ஒரு மனைவியும், மகனும் உள்ளனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.