BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 21 June 2014

மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்ட கேப்டன் விஜயகாந்த் !!

தேமுதிக தலைவர் விஜய்காந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் மலேசியா சென்று இருந்தார் . அங்குள்ள சுதேரா ஹார்பர் ரிசார்ட்டில் இருவரும் தங்கி இருந்தனர் . அந்த இடத்தைச் சுற்றி பார்த்துவிட்டு அங்குள்ள தமிழர்களிடம் சகஜமாக பழகினார் .



அவர் கிளம்பும் நாள் வந்ததால் அவர் கிளம்பும் போது அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ள அவருடைய ரசிகர்கள் அவரைத் தேடி வந்தனர் . அவரும் மகிழ்ச்சியுடன் ஒத்துக் கொண்டார் . இரண்டு இரண்டு பேராக போட்டோ எடுத்துக் கொண்டனர் . 

அப்போது காரைக்குடியைச் சேர்ந்த ஷாஜகான் என்னும் இளைஞர் இரண்டாவது முறையாக விஜயகாந்துடன் போட்டோ எடுக்க முயன்றார் . இதனை கவனித்த விஜய்காந்த் , " ஏ , என்னடா நீ , போட்டோ எடுத்து விளையாடிட்டு இருக்கியா நீ ?? " என கண்ணத்தில்  பளார் என்று ஒரு அடி அடித்தார் . அந்த இளைஞன் அதிர்ச்சியில் அப்படியே உட்கார்ந்து விட்டார் . இதை பார்த்து கண்டித்த பிரேமலதாவிடம் , " என்ன இப்போ மன்னிப்பு கேக்கனுமா ?? ஸாரி!! ஸாரி !! போதுமா ..! என்று சொல்லிவிட்டு இடத்தை விட்டு நகர்ந்தார் . 

அங்கே இருந்த மலேசிய தமிழர்கள் விஜய்காந்தின் இந்த செயலைக் கண்டு இதுக்கெல்லாமா அடிப்பாரு ?? என நொந்து கொண்டனர் !! 


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media