BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 21 June 2014

9 வது முறையாக உலக கோப்பைக்கு செல்லும் இந்திய ஜோடி !!

உலக கோப்பைக்கு இந்தியா போகவில்லையே என்று ஒவ்வொரு உலக கோப்பையின் போதும் நாம் வருத்தப்பட்டு கொண்டு இருப்போம் .

அந்த எதிர்பார்ப்புகளோடு இந்திய ஜோடி 9வது முறையாக சென்று உள்ளது .இவர்கள் கொல்கத்தாவை சேர்ந்த பர்னலால் - சேதாலி சாட்டர்ஜி தம்பதிகள் .1982 இல் ஸ்பெயினில் நடைபெற்ற உலக கோப்பை முதல் இப்போது பிரேசிலில் நடக்கும் உலககோப்பை வரை நேரில் சென்று பார்த்து உள்ளார்கள் .32 ஆண்டுகளாக கால்பந்து விளையாட்டை காதலித்து வருகிறார்கள் .

பர்னலால் சாட்டர்ஜிக்கு இப்போது 81 வயது ஆனாலும் அவரது கால்பந்து ஆர்வம் இன்னும் இளமையாகவே இருக்கிறது .இவர்கள் இதனை பார்பதற்கான செலவுக்காக சிறுக சிறுக சேர்கிறார்கள் .அதற்காக மீன் போன்ற இறைச்சி உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து விடுகிறார்கள் .

1986இல் மரடோனா ஆடியதை போல இன்னும் எந்த வீரரும் ஆடவில்லை என்கிறார்கள் .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media