நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியினால் 44 இடங்களையே பெற முடிந்தது . ஆனால் பாராளுமன்றத்தில் எதிர்கட்சியாக அமர குறைந்தது 55 இடங்கள் வேண்டும் . காங்கிரஸ் எதிர்கட்சியில் அமர இன்னும் 10 இடங்கள் வேண்டும் .
மேலும் மோடியின் புதிய அரசு காங்கிரஸ் ஆட்சியில் பதவியேற்ற ஆளுநர்களை மாற்ற திட்டமிட்டுள்ளது . இதனால் அவர்களை பதவியை ராஜினாமா செய்ய சொன்னதால் சர்ச்சை கிளம்பியது . மத்திய அரசு சொன்னதால் உத்தர பிரதேசம் மற்றும் சத்தீஷ்கர் மாநில ஆளுநர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர் .
மேலும் மேற்குவங்கம், கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய 5 மாநில ஆளுநர்களையும் பதவி விலக வலியுறுத்துகிறது மத்திய அரசு. டில்லியில் தேர்தலில் தோற்றபின் கேரளாவின் ஆளுநராக பொறுப்பேற்றவர் ஷலா தீட்ஷித் . இவர் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யமுடியாது என்று கூறியுள்ளார் . மேலும் அஸ்ஸா மற்றும் கர்நாடகா ஆளுநர்களும் இதே முடிவைத் தான் எடுத்துள்ளனர் .
இந்நிலையில் தீடீர் திருப்பமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இவர்கள் அனைவரையும் ராஜினாமா செய்ய சொல்லியதாக செய்திகள் வந்துள்ளது .
இந்த தீடீர் திருப்பம் ஏன் என்று பார்த்தால் , காங்கிரஸ் மத்திய அரசுடன் சூமுகமாக செயல்பட்டு எதிர் கட்சியாக அமர வாய்ப்புகளை அதிகப் படுத்துவதற்காக இந்த தீடீர் அறிவிப்பு வந்துள்ளதாக தெரிகிறது . காங்கிரஸ் அரசு இப்போது எதிர் கட்சி பதவிக்காக இவ்வாற செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.