BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 21 June 2014

தேர்தல் தோல்வி எதிரொலி 33 பொறுப்பாளர்கள் திமுகவிலிருந்து சஸ்பெண்ட், கண்துடைப்பு என கட்சியினர் வேதனை



தேர்தல் தோல்வி எதிரொலி திமுகவிலிருந்து எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், கேபி ராமலிங்கம், முல்லைவேந்தன் உட்பட 33 பேர் சஸ்பெண்ட்

நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை, பல இடங்களில் மூன்றாவது இடத்தையும் இரண்டு இடங்களில் நான்காவது இடத்தையும் பிடித்தது, இதை அடுத்து தேர்தல் தோல்வியை ஆராய ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது.

அதிமுக 37 இடங்களில் வென்று 3 இடங்களில் மட்டுமே தோல்வியுற்றது, ஆனாலும் தோல்வியுற்ற இடங்களில் பொறுப்பாளர்களாக இருந்த அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களின் பதவியை பறித்தார் ஜெயலலிதா, கோவை தொகுதியில் வெற்றி பெற்றாலும் வாக்கு வித்தியாசம் குறைந்ததால் கோவை மேயர், மற்றும் அமைச்சர்களை நீக்கினார், அதிமுக அதிரடி நடவடிக்கை எடுக்க திமுக எதுவும் செய்யாமல் இருந்தது திமுக தொண்டர்களிடையே சோர்வை தந்தது.

ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையின் பேரில் இன்று மூன்று மாவட்ட பொறுப்பாளர்கள், ஒரு மாநில பொறுப்பாளர் உட்பட 33 பேரை சஸ்பெண்ட் செய்துள்ளனர், ஆனால் இவர்களில் மேலே குறிப்பிட்ட நான்கு பேரை தவிர மற்றவர்கள் எல்லாம் ஒன்றிய நகர செயலாளர்கள் தான், உண்மையில் திமுகவின் குறுநில மன்னர்களாக திமுகவின் பெயரை கெடுத்துவரும், மாவட்டத்தில் தனக்கு இணையாக யாரும் வளரக்கூடாது என்று செயல்பட்ட மாவட்ட செயலாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லாதது இந்த நடவடிக்கைகள் வெறும் கண்துடைப்பு என்று திமுகவினரே  கருதுகின்றனர்.

சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள்

1.  எஸ்.எஸ். பழனிமாணிக்கம், மாவட்டக் கழகச் செயலாளர், தஞ்சை மாவட்டம்.

2.  வ. முல்லைவேந்தன், மாவட்டக் கழகப் பொறுப்பாளர், தர்மபுரி தெற்கு மாவட்டம்.

3. பெ. இன்பசேகரன், மாவட்டக் கழகப் பொறுப்பாளர், தர்மபுரி வடக்கு மாவட்டம்.

4.  சிட்டி முருகேசன், நகரக் கழகப் பொறுப்பாளர், தர்மபுரி

5.  சுந்தரம், நகரக் கழகச் செயலாளர், கவுண்டம்பாளையம், கோவை மாவட்டம்.

6.  தென்றல் செல்வராஜ், நகரக் கழகச் செயலாளர், பொள்ளாச்சி, கோவை மாவட்டம்.

7.  மகாராஜன், நகரக் கழகச் செயலாளர், துறையூர், திருச்சி மாவட்டம்.

8.  சீனி அண்ணாதுரை, நகரக் கழகச் செயலாளர், பட்டுக்கோட்டை, தஞ்சை
மாவட்டம்.

9.  இராஜ பூபாலன், நகரக் கழகச் செயலாளர், மன்னார்குடி

10. முத்துக்குமாரசாமி, பேரூர் கழகச் செயலாளர், நத்தம், திண்டுக்கல் மாவட்டம்.

11 ரவிச்சந்திரன், நங்கவள்ளி ஒன்றியக் கழகச் செயலாளர்,

12.  பாரப்பட்டி சுரேஷ்குமார், பனைமரத்துப்பட்டி ஒன்றியக்இவ் கழகச் செயலாளர்,.

13.  ஓமலூர் பரமன், ஓமலுhர் ஒன்றியக் கழகச் செயலாளர்

14.  கே. பொன்னுச்சாமி, மொரப்பூர் ஒன்றியக் கழகச் செயலாளர்.

15.  ஆர். காசிவிசுவநாதன் மேச்சேரி ஒன்றியக் கழகச் செயலாளர்.

16.  க. கார்த்திகேயன், தியாகதுர்க்கம் ஒன்றியக் கழகச் செயலாளர்.

17. தீ. சக்திவேல், கல்வராயன்மலை வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்.

18.  பி. கணேசன், நாமக்கல் ஒன்றியக் கழகச் செயலாளர்.

19.  டி.பி. சுப்பிரமணியம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியக் கழகச் செயலாளர்.

20.  இராஜமாணிக்கம், குடிமங்கலம் ஒன்றியக் கழகச் செயலாளர்.

21.  கோழிக்கடை கணேசன், வால்பாறை ஒன்றியக் கழகச் செயலாளர்.

22. ஆனந்தன், மண்ணச்சநல்லூர் ஒன்றியக் கழகச் செயலாளர்.

23. சோழன், முசிறி கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்.

24.  ஜெயபால், கடலூர் ஒன்றியக் கழகச் செயலாளர்.

25.  ஏனாதி பாலு, பட்டுக்கோட்டை ஒன்றியக் கழகச் செயலாளர்.

26.  தியாக இளங்கோ, ஒரத்தநாடு ஒன்றியக் கழகச் செயலாளர்.

27. மாரியப்பன், பழனி ஒன்றியக் கழகச் செயலாளர்.

28.  ஓ. ராஜேந்திரன், வத்தலக்குண்டு ஒன்றியக் கழகச் செயலாளர்.

29.  சின்ராஜ், விருதுநகர் ஒன்றியக் கழகச் செயலாளர்.

30.  இராஜசேகர், கடலாடி ஒன்றியக் கழகச் செயலாளர்.

31.  கனகு (எ) கனகராஜ், மண்டபம் ஒன்றியக் கழகப் பொறுப்பாளர்.

32.  கே.பி. இராமலிங்கம், எம்.பி., மாநில விவசாய அணிச் செயலாளர்.

33.  எஸ்.எம். போஸ், மாவட்டக் கழகத் துணைச் செயலாளர், விருதுநகர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media