கேரளாவின் தமிழர்கள் அதிகம் வாழும் இடங்களில் பணிபுரியும் , 1300 தமிழ் ஆசிரியர்களை கேரள அரசு பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது .
கேரளாவின் தேக்கடி உள்ளீட்ட பகுதிகளில் தமிழர்கள் அதிகம் வசித்து வருகின்றனர் . எனவே அங்குள்ள தமிழ் பிள்ளைகள் தமிழை கற்கும் வண்ணம் 1300 தமிழ் ஆசிரியர்களை இங்குள்ள தமிழ் மக்களின் கோரிக்கையின் படி கேரள அரசு நியமித்தது . இப்போது திடீரென அங்கு இருக்கும் அனைத்து தமிழ் ஆசிரியர்களும் பணி நீக்கம் செய்ய வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது .
தீடிரென்று இந்த அறிவிப்பு வெளியானதால் அங்குள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர் . இதனால் அந்த 1300 ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகி உள்ளது . அந்த ஆசிரியர்களின் எதிர்காலத்தை சிறிதும் ஆராயாமல் , முடிவு எடுத்துள்ள கேரள அரசின் இந்த முடிவு கடும் கண்டனத்துக்குரியது .
தமிழக அரசு கேரளாவில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உடனடியாக குரல் கொடுக்க வேண்டும் என்றும் , தமிழக அரசு கேரள அரசுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியில் அமர்த்த முயற்சி செய்ய வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.