கடந்த சில நாட்களுக்கு முன் பாஜக தலைவர் பொறுப்பு அமித் ஷா விற்கு வழங்கப்பட்டது , இப்போது அவருடைய வழக்கறிஞர் உதய் லலித் சுப்ரிம் கோர்ட் நீதிபதி ஆகிறார் . நான்கு பேர் கொண்ட பட்டியலில் இவரது பெயரும் இடம் பெற்றுள்ளது .
உதய் லலித் அமித் ஷா சார்பாக துளசிராம் பிரஜாபதி மற்றும் சோஹ்ராபுதின் ஷெய்க் ஆகியோரின் போலி எண்கவுண்டர் வழக்கில் அமித் ஷா சார்பாக வாதாடினார் . இதே சமயம் அவரை எதிர்த்து வாதாடிய கோபால் சுப்பிரமணியன் சர்ச்சைக்குரிய முறையில் . இந்த நிதிபதி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார் . இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவின் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா , தன்னுடைய அனுமதி இல்லாமல் கோபால் சுப்பிரமணியன் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறி பரபரப்பு ஏற்படுத்தினார் .
இந்த உதய் லலித் பற்றி நாம் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியவை !!
* மாநில அரசுக்கு ஆதரவாக பினாயக் சென்னை எதிர்த்து ஆஜரானார் .
* சல்மான் கான் மான் வேட்டை வழக்கில் அவருக்கு ஆதரவாக ஆஜரானார் .
* பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் ஊழல் வழக்கில் அவர் சார்பாக ஆஜரானார் .
* முன்னால் கிரிக்கெட் வீரர் மற்றும் பாஜக உறுப்பினர் நவரோஜித் சிங் சித்து ஆட்கொலை வழக்கில் அவர் சார்பாக ஆஜரானார் .
* கருப்பு பண புகழ் ஹாசன் அலி சார்பாகவும் ஆஜரானார் .
* இவர் 2ஜி வழக்கிலும் சிறப்பு அரசு வழக்கறிஞராக ஆஜரானார் .
* மேலும் ஜெனரல் வி.கே சிங் , தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பாகவும் ஆஜரானார் .
* மேலும் வழக்கறிஞராக இருந்து நீதிபதியாக உயர்த்தப்பட்ட ஆறாவது வழக்கறிஞராக இவர் இருப்பார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.