பெங்களுர் மாநகராட்சியில் எலி பிடிப்பதில் ஒரு ஊழல் நடந்து உள்ளது. அந்த மாநகராட்சியில் உள்ள மல்லேஸ்வரம் என்னும் பகுதியில் உள்ள மாசு கட்டுபாடு வாரியத்தின் கிளை அலுவலக கட்டிடம் உள்ளது. இது 2 ஆண்டுகளாக பயன் இல்லாமல் இருந்தது. அதனால் இதனை த்டுப்பூசி, போலியொ சொட்டு மருந்து போடுவது, சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு பயன்படுத்தி வந்தார்கள். அங்கே எலி தொல்லைகள் அதிகமாக இருந்தது. அங்கு வந்த குழ்ந்தைகளை கடித்தது, மருந்துகளை சேதப்படுத்தியது. என்வே அதனை பிடிப்பதற்கு மாநகராட்சி உத்தரவிட்டது.
இது வரை எத்தனை எலிகள் பிடிக்கப்பட்டு உள்ளது என அந்த பகுதியின் கவுன்சிலர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்டார். அதில் 3 மாதத்தில் 20 எலிகள் பிடிக்கப்பட்டு உள்ளதாகவும். அதற்காக 20 இலட்சம் செலவு ஆனதாகவும் கூறி உள்ளார்கள். அதாவது ஒரு எலியை பிடிப்பதற்கு 10 ஆயிரம் ஆகி உள்ளது. அந்த மாநகராட்சியில் உள்ள அனைத்து எலிகளையும் பிடிப்பதற்கே 20 இலட்சம் தான் செலவு ஆகி உள்ளது.
எலி பிடிப்பதில் கூட ஊழல் செய்யும் அதிகாரிகளே யு ஆர் கிரேட் !!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.