BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 12 July 2014

பாலா படத்தில் நடிகை ஆகும் " சூப்பர் சிங்கர் " பிரகதி !!



தன்னுடைய அழகிய குரலில் நம் மனதை கவர்ந்தவர் சுப்பர் சிங்கர் பிரகதி . இவர் பாலாவின் படத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையில் தன்னுடைய முதல் பாட்டை பாடி சினிமாவிற்குள் நுழைந்தார் . இப்போது இயக்குநர் பாலாவின் படத்தில் நடிக்க இருக்கிறார் .


பாலா இயக்கத்தில் சசி குமார் நடிக்கும் படம் தாரை தப்பட்டை . இதில் சசிகுமார் ஒரு நாதஸ்வர கலைஞராக வருகிறார் . அதில் சசிகுமாரின் தங்கை ஒரு நாட்டுப்புற பாடகி . அந்த தங்கை வேடத்தில் தான் பிரகதி நடிக்க இருக்கிறார் . இதை இவர் தன்னுடைய இணைய பக்கத்தில் தெரிவித்து இருந்தார் .


வாழ்த்துக்கள் பிரகதி !! ஆனால் பாலா அவர்களின் படத்தில் நடிப்பது அவ்வளவு எளிது அல்ல என்பதை பிரகதி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் .




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media