உலகின் உயரமான் இரயில்வே பாலத்தைக் கட்ட ஹிமாலயாஸில் இந்திய பொறியாளர்கள் முயற்சித்து வருகின்றனர் . இந்த பாலம் ஈபிள் டவரை விட 35 மீட்டர் உயரமானதாக இருக்கும் . இந்த பாலத்தின் கட்டிட பணிகள் 2016 க்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .
ஆர்ச் போன்று அமைப்பு உடைய இந்த பாலம் செனாப் நதி மீது கட்ட உள்ளனர் . இந்த பாலம் வடக்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பகுதிகளை இணைக்க பயன்படும் . இந்த பாலம் கட்டி முடிக்கப்படும் போது 359 மீட்டே உயரத்தில் இருக்கும் . இதன் மூலம் இதுவரை உயரமான இரயில்வே பாலமாக இருக்கும் சீனாவின் பெய்பாஞ்சியாங்க் பாலத்தின் சாதனையை முறியடித்து விடும் .
2002 இல் தொடங்கப்பட்ட இந்த திட்டம் , அதிக காற்றின் காரணமாகவும் பாதுகாப்பு கருதியும் 2008 ஆம் ஆண்டில் நிறுத்திவைக்கப்பட்டது . பின்னர் 2010 ஆம் ஆண்டில் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டது . இந்த திட்டத்தை முடிக்க 92 மில்லியன் டாலர்கள் செலவாகும் என கணித்துள்ளனர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.