BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 12 July 2014

ஜெர்மணி உலக கோப்பையை வெல்லும் என 20 ஆண்டுகளாக விஸ்கி பாட்டிலுடன் காத்து இருக்கும் இந்திய ரசிகர் !!!


கால்பந்து  உலக கோப்பை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது . இறுதிப் போட்டியில் ஜெர்மணியும் அர்ஜெண்டினாவும் மோத உள்ளனர் . இந்த போட்டிக்காக உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கின்றனர் .

ஆனால் இந்திய ரசிகர் ஒருவரோ கடந்த 20 ஆண்டுகளாக ஜெர்மணி கோப்பையை வெல்லும் என காத்து இருக்கிறார் .

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் போரோ என்பவர் 53 வயது வர்த்தகர் . இவர் 1994 ஆம் ஆண்டு உலக கோப்பையை வெல்லும் என ஒரு விஸ்கி பாட்டில் வாங்கினார் . ஆனால் அந்த தொடரில் காலிறுதிப் போட்டியில் பல்கேரியா அணியுடன் தோல்வியைச் சந்தித்து தொடரில் இருந்து வெளியேறியது . இதனால் மிகுந்த வேதனை அடைந்த அவர் அந்த விஸ்கி பாட்டிலை அவரது வீட்டு தோட்டத்தில் புதைத்து வைத்தார் . மீண்டுல் உலக கோப்பையை ஜெர்மணி வென்றால் தான் அதனை எடுக்க வேண்டும் என்று நினைத்தார் .


இப்போது அவர் கூறுகையில் , " 20 ஆண்டுகளுக்குப் பின் இப்போதைய ஜெர்மணி அணியின் ஆட்டம் என்னை அந்த விஸ்கி பாட்டிலை வெளியே எடுக்க வைத்துள்ளது . ஆனால் நண்பர்கள் அதை ஏலத்தில் விடுமாறு கூறுகின்றனர் " என்றார் .



இவர் 2002 ஆம் ஆண்டு ஜெர்மணி பைனலில் தோற்றதில் இருந்து குடிப்பதை நிறுத்தி விட்டார் .

இவர் இந்த ஆண்டில் அந்த விஸ்கி பாட்டிலை குடிப்பாரா ?? பொறுத்து இருந்து பார்ப்போம் .



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media