இந்தியாவில் கிழக்கு போகோரா மாவட்டத்தில் தந்தை குடித்து விட்டு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்தவரை அடித்ததால் , அவருடைய மகளை கற்பழிக்கும் படி ஊர்ப் பெரியவர் தண்டனை கொடுத்துள்ளார் . இவர் எல்லாம் ஊர்ப் பெரியவரா ??
ஒரு நாள் இரவில் குடிகாரன் குடித்துவிட்டு தன்னுடைய பக்கத்து வீட்டிற்குள் புகுந்து அங்கு இருந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றான் . இதனைக் கண்ட அந்த பெண்ணின் கணவன் அவனை அடித்து துரத்தி விட்டார் . அவன் இதனை அந்த ஊர்ப் பெரியவர்களிடம் சென்று தெரிவித்தான் .
அந்த கணவரின் நடவடிக்கைக்கு தண்டனை கொடுக்கும் விதமாக அவருடைய பத்து வயது மகளை கற்பழிக்க உத்தரவிட்டார் அந்த பெரியவர் . ஊர் மக்கள் முன்னிலையில் அந்த சிறுமியை இழுத்துச் சென்று அந்த சிறுமியை பாலியல் வன்முறை செய்தான் அந்த குடிகாரன் . ஊர் மக்கள் தங்களுக்கும் இந்த நிலைமை வந்து விடுமோ என்ற பயத்தில் இந்த கோர சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர் .
ரத்த வெள்ளத்தில் கடந்த அந்த சிறுமியை அவரின் அப்பா மற்றும் அம்மா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் . காவல்துறையிடம் பூகார் ஒன்றை கொடுத்துள்ளனர் . காவல் துறையினர் அந்த பெரியவரையும் அந்த குடிகாரனையும் கைது செய்துள்ளனர் .
இந்த சம்பவத்தை எழுதும் பொதே நெஞ்சில் ஒரு தடுமாற்றம் ஏற்படுகிறது . அந்த பத்து வயது சிறுமிக்கு என்ன தெரிந்து இருக்கும் . நம்மை பாலியல் கொடுமைக்கு ஆளாக்குகிறார்கள் என்பது தான் விளங்குமா . தன்னுடைய மனைவியை சீண்டினால் எந்த ஆண் தான் பார்த்துக் கொண்டு இருப்பான் . சீண்டிய குடிகாரனை விட்டுவிட்டு , மீண்டும் அவனுக்கே அந்த கணவனை பழிவாங்கும் அதிகாரம் கொடுக்க அந்த பெரியவர் யார் ?? ச்சீ .. இவரெல்லாம் பெரியவரா .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.