உலக கோப்பை இறுதி போட்டி நாளை நடக்க உள்ளது. இதில் ஜெர்மனி அணியும், அர்ஜென்டினா அணியும் மோத உள்ளன. இரு அணிகளுமே சம பலம் வாய்ந்த அணிகள். யார் வெற்றி பெறுவார் என்று கணிப்பதே கடினம். ஜெர்மனி ஆரம்பம் முதலே வலுவான அணியாக உள்ளது. அர்ஜெண்டினா அணி ஒவ்வொரு ஆட்டமாக தனது ஆட்டத்திறனை மேம்படுத்தி கொண்டே வருகிறது. இவர்கள் இருவரும் இறுதி ஆட்டத்தில் மோதுவது இது 3 வது முறை , இதற்கு முன் 1986 இல் அர்ஜெண்டினாவும், 1990 இல் ஜெர்மனியும் வென்றன .
இந்த இறுதி போட்டியில் ஜெர்மனி அணி மெஸ்ஸிக்கு என தனி ரகசிய திட்டம் வைத்து உள்ளார்கள். நெதர்லாந்து அப்படி செயல்பட்டதால் தான் மெஸ்ஸியால் கோல் அடிக்க முடியவில்லை. ஜெர்மனி அணி இதற்கு முன் லீக் ஆட்டத்தில் ரோனால்டோவிற்கு எதிராக தனி திட்டம் உருவாக்கி அதனை செயல்படுத்தி வெற்றியும் கண்டார்கள். அதே போல் இந்த திட்டம் வெற்றி பெறுமா என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
யார் வெற்றி பெற்றாலும் ரசிகர்களுக்கு இந்த ஆட்டம் விருந்தாக அமையும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.