ஆம் ஆத்மி கட்சி தலைவர் டில்லி முதல்வர் பொறுப்பில் இருந்து வெளியேறியபின் கட்சியின் மீது பலருக்கு அதிருப்தி ஏற்பட்டது . மேலும் உட்கட்சிப் பூசல் ஏற்பட்டு இருந்ததாக செய்திகள் வெளிவந்தன . இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாட்டில் திருப்தி இல்லாத தொண்டர்கள் சிலர் இணைந்து ஆகஸ்து 20 முதல் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் ஒவ்வொருவரின் உண்மை முகத்தை ஆதாரத்துடன் வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளனர் .
எவிஎம் (AVAM - AAP VOLUNTARY MANCH ) என்ற பெயரில் செயல்படும் இந்த இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களுக்கு மதிப்பு கொடுக்கவில்லை என்றும் , அவர்களிடம் நிறைய கோரிக்கைகள் இருக்கின்றன எனவும் கூறி வருகின்றனர் . எனவே இந்த இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில் , " புதன் கிழமை முதல் ஒவ்வொரு தலைவரின் உண்மை முகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம் . அவர்கள் அனைவருக்கும் எதிரான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன " என்றார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.