தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சோதனை செய்ததில் பல முறைகேடுகள் நடந்தது தெரியவந்துள்ளது. மதுபானங்களின் விலையை அதிக விலைக்கு விற்றதன் மூலம் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதிக விலைக்கு விற்ற ஊழியர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கபடவில்லை. எனவே அவர்கள் மீதும் குற்றம் உள்ளது. எனவே முறைகேடு செய்த அந்த பணத்தை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடமே இருந்த வசூல் செய்ய டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதனால் இனி அதிக விலைக்கு விற்பதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் பயப்படுவார்கள் என்பதால் சரியான விலைக்கு சரக்கு கிடைக்கும் என தமிழக குடிமக்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். ஆனால் இன்று முதல் எல்லா சர்க்குகளின் விலையும் உயருவதால் கொஞ்சம் கவலையாகவும் உள்ளார்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.