கடந்தவார விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் காசு ஆசை கொண்டு அலையும் மருத்துவர்களை கடுமையாக விமர்சித்தார்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐபாட் அமைப்பு (Intern and post graduate association of tamilnadu (IPAT-Chennai) இன்று (செவ்வாய்) மாலை 4 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது, இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில்
விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் மக்களுக்காக 24*7 மணியும் உழைக்கும் மருத்துவர்களை இழிவு செய்யும் விதமாக கருத்துக்களை தெரிவித்தமைக்காகவும், மகப்பேறு ஸ்கேன் தொடர்பாக அறிவியல் பூர்வமற்ற கருத்துக்களை மக்களை குழப்பும் விதமாக தெரிவித்ததை எதிர்த்தும் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நாளை (20.08.14) மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.என்று குறிப்பிட்டனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.