நீங்கள் ஸ்மார்ட்போன் வைத்து இருக்கீறீர்களா ?? அதில் இண்டர்நெட் சேவையை பயன்படுத்தி வருகிறீர்களா ?? அப்படி என்றால் நீங்கள் இதுவரை எங்கே எங்கே சென்று இருக்குறீர்கள் என்பது கூகுளிற்கு தெரியும் . ஆம் , கூகுள் மேப்ஸ் மூலம் கூகுள் உங்களை கண்காணித்து வருகிறது .
இந்த தகவல்கள் எல்லாம் நமது கூகுள் அக்கௌண்டிற்கு தானாக அனுப்பப்பட்டு விடுகிறது . அதுவும் ஒரு தெளிவான விவரங்கள் உடைய மேப்பில் . இந்த மேப்பின் மூலம் ஒவ்வொரு நாளும் எங்கே சென்றோம் என்பதை பார்க்கும் அளவுக்கு தெளிவாக இருக்கிறது .
ஆனால் கூகுள் நிறுவனம் இது கட்டாயம் இல்லை , வேண்டும் என்றால் இதனை உங்கள் மொபைலில் ஆப் செய்து வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறது .
இதனை எப்படி ஆப் செய்வது : ( ஆண்ட்ராய்ட் )
- முதலில் " செட்டிங்க்ஸ் " செல்லவும்
- " லோகேஷன் " ஆழுத்தவும்
- " கூகுல் லோகேஷன் ரிப்போர்டிங் " என்பதை அழுத்தவும் .
- " லோகேஷன் ஹிஸ்டரி " என்பதை ஆப் செய்யவும் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.